/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்
/
கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்
கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்
கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்
ADDED : மே 19, 2024 02:52 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது: பறவைக்காய்ச்சல் எச்5 என்1 எனும் வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய நோயாகும். பறவைகளை தாக்கி, அதன் வாயிலாக மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, சுவாசத்துளிகள் மூலம் பரவும். எனவே பறவைகளுடன் நெருக்கமாக பணியாற்றும் பணியாளர்கள், முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும். இந்நோய் கோழி, வாத்து, கூஸ் வாத்துகள், வான் கோழி, கினியா கோழிகள் மற்றும் காடைகளுக்கு பரவும். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டதால், அம்மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், வாத்துகள், கோழித்தீவனங்கள் தொடர்பான எதனையும் கொள்முதல் செய்ய வேண்டாம்.
மேற்படி பொருட்களை, கடந்த ஒரு மாதத்தில் கேரள மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்திருந்தால், அவற்றை உடனடியாக அழித்து விட வேண்டும். கோழிகளின் அசாதாரண இறப்பு குறித்து, உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், ஆய்விற்கு முழு ஒத்துழைப்பு அளித்திடவும், கிருஷ்ணகிரி மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் முட்டைகள் மற்றும் கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர் அருள்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர்
ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

