/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரதமருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவிப்பு மக்கள் வெள்ளத்தில் வேலுார் கோட்டை மைதானம்
/
பிரதமருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவிப்பு மக்கள் வெள்ளத்தில் வேலுார் கோட்டை மைதானம்
பிரதமருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவிப்பு மக்கள் வெள்ளத்தில் வேலுார் கோட்டை மைதானம்
பிரதமருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவிப்பு மக்கள் வெள்ளத்தில் வேலுார் கோட்டை மைதானம்
ADDED : ஏப் 11, 2024 12:05 PM
வேலுார்: வேலுார் கோட்டை மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு, பா.ஜ., கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தனர்.
வேலுார் கோட்டை மைதானத்தில் நேற்று, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த, வேலுார், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார்.
இதையொட்டி அவர், வேலுார் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக, சென்னை - பெங்களூரு, 6 வழிச்சாலை வழியாக, வேலுார் கிரீன் சர்க்கிள், பழைய பைபாஸ் சாலை, கோட்டை சுற்றுச்சாலை வழியாக, சரியாக, காலை, 10:45 மணிக்கு கோட்டை மைதானத்திற்கு வந்தார். அப்போது வழி நெடுகிலும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர், 10:52 மணி வரை மேடையில் இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள், மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ஒவ்வொருவராக சந்தித்தனர். அப்போது மரியாதை நிமித்தமாக அனைவரும் தனித்தனியாக சால்வை அணிவித்தனர். அவர்களிடம் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து வாழ்த்து கூறினார்.
அப்போது வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர், ஏ.சி.சண்மும் வெள்ளியால் ஆன திருப்பதி ஏழுமலையான் படத்தை வழங்கினார். பின்னர், பா.ஜ., கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர். தொடர்ந்து, 10:53 மணிக்கு தன் பேச்சை தொடங்கிய பிரதமர், 11:30 மணி வரை பேசினார்.
அவர் இடையிடையே, தி.மு.க.,வை விமர்சனம் செய்து பேசும்போது, கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து, கை தட்டி, மோடி மோடி என கோஷம் எழுப்பினர். இறுதியாக பேசி முடித்தபின்பு, அவர் வணக்கம் என கூறியபோது, தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். பின்னர், 'பாரத் மாதா கீ' என, 4 முறை மோடி சொல்ல, தொண்டர்களும் அதே போன்று கூறினர்.
மேலும், 'வந்தே' என, 9 முறை மோடி கூற, தொண்டர்கள், 'மாதரம்' என, 9 முறை கூறி ஆரவாரம் செய்தனர். மோடி வருகையால், வேலுார் நகரம் முழுவதும் மக்கள் வெள்ளமாக இருந்தது. பாதுகாப்பு பணியில், 3,900 போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதில், விமான நிலையத்தை சுற்றி, 20 அடிக்கு ஒரு போலீசாரும், விமான நிலையத்திலிருந்து கோட்டை மைதானம் வரும் வரை, 30 அடிக்கு ஒரு போலீசார் என, சாலையின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

