/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உருவாக்க வாக்களியுங்கள்: தி.மு.க., எம்.எல்.ஏ.,
/
கி.கிரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உருவாக்க வாக்களியுங்கள்: தி.மு.க., எம்.எல்.ஏ.,
கி.கிரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உருவாக்க வாக்களியுங்கள்: தி.மு.க., எம்.எல்.ஏ.,
கி.கிரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உருவாக்க வாக்களியுங்கள்: தி.மு.க., எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 13, 2024 10:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை, நாட்டின் முதன்மையான மாவட்டமாக உருவாக்க இண்டியா கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் என, தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் பேசினார்.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியின், இண்டியா கூட்டணி காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பெத்ததாளப்பள்ளி, வெங்கடாபுரம், பையனப்பள்ளி, திப்பனப்பள்ளி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்.,களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், சிறப்பு வாய்ந்து பல திட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது. 1989ல், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தபோது, தளி பகுதியில் தான் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது போல நாடே போற்றும் திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்த பெருமை தி.மு.க.,வையே சேரும்.
தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் எனில், நமது இண்டியா கூட்டணியின் காங்., வேட்பாளர் கோபிநாத்தை பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நாடு போற்றும் பல திட்டங்கள் முதல் உங்கள் பஞ்.,களில் நீண்ட கால கோரிக்கைகளான உயர் மின்கோபுர விளக்கு, சிறுபாலம் உள்ளிட்ட திட்டங்கள் வரை அனைத்து திட்டங்களும் செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் கைகாட்டும் இண்டியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பிரதமராக வேண்டும். இவ்வாறு பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், வெங்கடாபுரம் பஞ்., தலைவர் ராஜா உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

