/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி
/
குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி
ADDED : மே 15, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ மனைவி கிருஷ்ணம்மா, 32, கூலித்தொழிலாளி; பைரமங்கலத்திலுள்ள தன் தாய் வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, பென்னிக்கல்லில் உள்ள தனியார் குவாரி குட்டையில் துணி துவைத்தார்.
அப்போது குட்டைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

