/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
23 ஆண்டுக்கு பின் சந்தித்த தொழிலாளர்கள்: பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

ADDED : ஆக 28, 2024 08:45 AM
ஓசூர்: ஓசூரில், 23 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட தொழிலாளர்கள், தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த, 1982 ல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 'எல்காட்' என்ற தமிழக அரசு நிறுவனத்தை துவக்கி வைத்தார். சில ஆண்டுகள் கழித்து, நிர்வாக காரணங்களால் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 'எல்நெட்' என்ற பெயரில் சில ஆண்டுகள் இயங்கி வந்தது. கடந்த, 1999 ஜூலை, 16 ல் நிறுவனம் மூடப்பட்டது. அரசால், 'எல்காட்' நிறுவனத்திற்கு பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, 'எல்காட்' நிர்வாகம் பணி அமர்த்தியிருந்த தொழிலாளர்களுக்கு மட்டும் மாற்று வேலையாக, பல்வேறு அரசு துறைகளில் பணி வழங்கப்பட்டது.
கடந்த, 2001 ல் பிரிந்த, 'எல்காட்' மற்றும் 'எல்நெட்' தொழிலாளர்கள், 23 ஆண்டுகளுக்கு பின், ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஓசூரில் நடந்தது. நீண்ட காலத்திற்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட, 125 தொழிலாளர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள் மற்றும் மனஅழுத்தம் போக்க, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.