/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 நாள் வேலை கோரி காத்திருப்பு போராட்டம்
/
100 நாள் வேலை கோரி காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 05, 2025 01:23 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்ட தலைவர் லெனின் தலைமை வகித்தார். கிராமப்புற ஏழை மக்களுக்கு, ஊரக வேலை திட்டத்தை முழுமையாக வழங்கக்கோரி, ஊரக வேலை சட்ட விதிகளின்படி வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க கோரியும், அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்கி, முழுமையான கூலி, 336 வழங்க கோரியும், வேலை செய்து பல மாதங்களாக நிலுவையிலுள்ள, சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
* கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் மாது தலைமை வகித்தார்.