/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களை மாற்ற தர்ணா
/
100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களை மாற்ற தர்ணா
100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களை மாற்ற தர்ணா
100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களை மாற்ற தர்ணா
ADDED : அக் 19, 2024 01:23 AM
100 நாள் வேலை திட்ட பணிதள
பொறுப்பாளர்களை மாற்ற தர்ணா
போச்சம்பள்ளி, அக். 19-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதம்பட்டி பஞ்.,ல், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்.,ல் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியை சேர்ந்த சாய்லட்சுமி, நதியா இருவரும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக கூறி, நேற்று பஞ்., அலுவலகத்தை, 30க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலின் படி அங்கு வந்த, பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

