sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு

/

தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு


ADDED : டிச 12, 2024 07:37 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 11 யானைகள் நேற்று அதி-காலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்-காட்டில் மொத்தம், 3 குழுவாக, 32 யானைகள் முகாமிட்டிருந்-தன. அவற்றை, 2 குழுக்களாக ஒன்றிணைத்த வனத்துறையினர், நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி விரட்டினர். கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை, 11 யானைகள் ஒரு குழுவாகவும், 21 யானைகள் மற்றொரு குழு-வாகவும் கடந்து சென்றன. இதில், 11 யானைகள்

தேன்கனிக்-கோட்டை வனச்சரகம் பேவநத்தம் வனப்பகுதிக்கு நேற்று அதி-காலை, 4:00 மணிக்கு விரட்டப்பட்டன. ஆனால், 21 யானைகள் அடங்கிய மற்றொரு குழு, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்-பட்ட ஒன்னகுறுக்கி கரடு வனப்பகுதியில் தஞ்சமடைந்தன. அவற்றை நேற்று மாலை வரை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன் பின் அவற்றை, தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டும் பணியில் ஈடு-பட்டனர்.தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, ராயக்-கோட்டை, ஓசூர் வனச்சரகத்திற்கு யானைகள் திரும்பி, திரும்பி வருவதும், அவற்றை வனத்துறையினர் விரட்டுவதுமாக உள்-ளனர். யானைகளால் வனப்பகுதியை

ஒட்டிய கிராமங்களில், ராகி, தக்காளி, நெல், முட்டைகோஸ், சோளம் உள்ளிட்ட பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வருவதால், கர்நாடகா மாநில வனப்பகு-திக்கு, யானைகளை விரைந்து விரட்ட, விவசாயிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us