/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவ முகாமில் 1,477 பேருக்கு சிகிச்சை
/
மருத்துவ முகாமில் 1,477 பேருக்கு சிகிச்சை
ADDED : அக் 19, 2025 02:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்கா-ரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
பர்கூர், தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, பாகலுார், தளி, கெலமங்கலம், ஆலப்பட்டி, சூளகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர் மற்றும் மத்துார் ஆகிய பகுதிகளில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடந்தன. இன்று (நேற்று), சிங்காரப்-பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நடந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,477 பேர் பதிவு செய்து பல்-வேறு சிகிச்சை பெற்றனர். பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி
கள் நலத்துறை சார்பில், 89 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 45 பேருக்கு முதல்வர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலு-வலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.