/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேனில் கடத்திய 1.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
வேனில் கடத்திய 1.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 19, 2024 07:07 AM
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே, பிக்கப் வேனில் கடத்த முயன்ற, 1.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்-பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று சூளகிரி அருகே உலகம் - சாமல்பள்ளம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வேனை மடக்கி சோதனை-யிட்டதில், 5-0 கிலோ அளவிலான, 30 மூட்டைகளில், 1,500 கிலோ
ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.விசாரணையில் உலகம், சாமல்பள்ளம், செஞ்சலம்பட்டி பகுதி-களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சூளகிரி பகுதி
ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஏனு-சோனை
அடுத்த மேல்மொரசப்பட்டியை சேர்ந்த தரணி, 20, மற்றும் வேன் உரிமையாளர் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார்,
வேனுடன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.