/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்கா, லாட்டரி விற்ற 17 பேர் கைது
/
குட்கா, லாட்டரி விற்ற 17 பேர் கைது
ADDED : டிச 17, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா, லாட்டரி விற்ற 17 பேர் கைது
கிருஷ்ணகிரி, டிச. 17-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்கிறதா என அந்தந்த பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற குருபரப்பள்ளி மாரியப்பன், வேப்பனப்பள்ளி நாகன் உள்பட மொத்தம், 14 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல, கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி, சேலம் சாலை, காவேரிப்பட்டணம் திம்மாபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற எலத்தகிரி ஆனந்த், கிருஷ்ணகிரி புதுபேட்டை சீனிவாசன், மிட்டஅள்ளி போஸ் ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.