/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாவரக்கரை வனப்பகுதியில் 18,000 விதை பந்துகள் வீச்சு
/
தாவரக்கரை வனப்பகுதியில் 18,000 விதை பந்துகள் வீச்சு
தாவரக்கரை வனப்பகுதியில் 18,000 விதை பந்துகள் வீச்சு
தாவரக்கரை வனப்பகுதியில் 18,000 விதை பந்துகள் வீச்சு
ADDED : டிச 12, 2024 01:16 AM
ஓசூர், டிச. 12-
தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை வனப்பகுதியில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், மலைவாழ் மக்கள் மூலம், 18,000 விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் முன்னிலையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள், மலைவாழ் மக்கள் நலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் ராமநாதன், மலைவாழ் மக்கள் சங்க தலைவி ருத்ரி உட்பட, 57க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வனப்பகுதியில் விதைப்பந்துகளை வீசினர். மழைக்காலம் என்பதால், அதிகளவிலான விதைகள் வனத்தில் வளரும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள், தங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, விவசாய பயிர்களை பாதுகாத்து கொள்ள, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், 57 பேருக்கு அதிக வெளிச்சம் தரும் ஸ்டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டன.