/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
/
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
ADDED : பிப் 16, 2025 04:00 AM
ஓசூர்: ஓசூரில், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, உதவி பொறியாளர் உட்பட, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்-திரன், 38. பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஊழியர். ஓசூர், பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டனில் வீடு கட்டி வருகிறார்.இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவல-கத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, 43, மற்றும் கமர்சியல் இன்ஸ்-பெக்டர் பிரபாகரன், 45, ஆகியோர், 35,000 ரூபாய் லஞ்சம் கேட்-டுள்ளனர். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை ராஜேந்திரன் வழங்-கினார். மீதமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி., நாகராஜ் (பொறுப்பு) தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் நேற்று கொடுத்தனுப்பினர்.
அதை எடுத்து கொண்டு சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அவர், உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் அதை வழங்கினார்.
அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த தொகை போதாது என்றும், மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் கேட்-டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது
செய்தனர்.

