/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய நிலங்களில் முகாமிட்ட 2 யானை
/
விவசாய நிலங்களில் முகாமிட்ட 2 யானை
ADDED : செப் 06, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று மாலை ஆலஹள்ளி வனத்திலிருந்து வெளியேறிய இரு ஆண் யானைகள், கிரியனப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.
பயிர்களை யானைகளிடம் இருந்து காப்பாற்ற, விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் யானைகள் அங்கிருந்து செல்லாமல் நின்றிருந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் யானைகள்
வனப்பகுதி நோக்கி சென்றன.