/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 2 போலி டாக்டர்கள் கைது கிளினிக், லேப், மெடிக்கலுக்கு 'சீல்'
/
ஓசூரில் 2 போலி டாக்டர்கள் கைது கிளினிக், லேப், மெடிக்கலுக்கு 'சீல்'
ஓசூரில் 2 போலி டாக்டர்கள் கைது கிளினிக், லேப், மெடிக்கலுக்கு 'சீல்'
ஓசூரில் 2 போலி டாக்டர்கள் கைது கிளினிக், லேப், மெடிக்கலுக்கு 'சீல்'
ADDED : நவ 12, 2024 07:12 AM
ஓசூர்: ஓசூரில், பெண் போலி டாக்டர்கள் இருவர் கைது செய்யப்-பட்டு, கிளினிக், லேப், மெடிக்கல் ஸ்டோருக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்த அசோக் என்ப-வரின் மனைவி கவுரி, 34. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரச-னட்டியில் தங்கி, அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே, கிளினிக், லேப், மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். டி.பார்ம் பி.இ.எம்.எஸ்., படித்துள்ள கவுரி, நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக, முதல்வர் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் சென்றது.
இதையடுத்து, ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி மற்றும் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜிவ்காந்தி ஆகியோர், நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.அப்போது, கவுரி மற்றும் அவருக்கு உதவியாக மூக்கண்டப்பள்-ளியை சேர்ந்த, 10 ம் வகுப்பு படித்துள்ள சிலம்பரசி, 28, ஆகியோர், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்-பது தெரிந்தது. முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி புகார் படி, கவுரி, சிலம்பரசி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, மெடிக்கல், லேப், கிளினிக் ஆகியவற்றில் இருந்த மருந்து, மாத்தி-ரைகளை கைப்பற்றினர். பின், வருவாய்த்துறையினர் முன்னி-லையில், 'சீல்' வைக்கப்பட்டது.