தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : அக் 24, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் பல்லுார் சந்திப்பு சாலையில், பேகேப்பள்ளி வி.ஏ.ஓ., ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக தனித்தனி-யாக வந்த இரு லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசின் தடையை மீறி, தொரப்பள்ளி கிராமத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு ஒரு லாரியில், 5 யூனிட்டும், மற்றொரு லாரியில், 6 யூனிட்டும் எம்.சாண்ட் கடத்தி செல்வது தெரிந்தது.

இரு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்-தனர். வி.ஏ.ஓ., ஆனந்தன் புகார்படி, லாரி டிரைவர்களான ஓசூர் அருகே கொல்லப்பள்-ளியை சேர்ந்த ஜாகீர் அகமது, 38, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொம்மரஹள்-ளியை சேர்ந்த மனோகரன், 52, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளர்-களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us