ADDED : அக் 24, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரண், 34, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 13ம் தேதி இரவு, 7:00 மணிக்கு ஓசூர் சாலையிலுள்ள ராயக்-கோட்டை தக்காளி மண்டி அருகே நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த அடை-யாளம் தெரியாத வாகனம், சரண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம-டைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ராயக்கோட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர்.
