UPDATED : அக் 24, 2026 04:44 AM
ADDED : அக் 24, 2026 04:09 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகு-திகளில் சாரல் மழை பெய்தது. இரண்டு நாட்க-ளாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் சர்வீஸ் சாலை, பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் என பள்ளமான இடங்-களில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 513 கன அடியாக இருந்த நீர்வரத்து, மழையால் நேற்று, 649 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து கால்வாயில், 162 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 375 கன அடி என மொத்தம், 537 கன அடிநீர் திறக்கப்பட்டி-ருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்-டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில், 17.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், சூளகிரி, 15, பெனுகொண்டாபுரம், 11.2, கிருஷ்ண-கிரி, 10.3, ஓசூர், 9.2, போச்சம்பள்ளி, 8, ஊத்தங்-கரை, 6.2, சின்னாறு அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை தலா, 5, பாரூர், 4, கே.ஆர்.பி., அணை, 3.2 என மொத்தம், 99.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
