/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கைது
/
20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கைது
20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கைது
20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கைது
ADDED : ஜூலை 09, 2025 02:04 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வேப்பனஹள்ளி - பேரிகை சாலை, நாச்சிக்குப்பம் சந்திப்பில், கடந்த, 6ல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசியை கடத்திச்செல்வது தெரிந்தது. அதில், 50 கிலோ வீதம், 407 பைகளில், 20,350 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து, வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.
டிரைவரிடம் விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கங்காநல்லுாரை சேர்ந்த அரவிந்த், 32, என தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அரவிந்தை கைது செய்தனர். அவரது வாக்குமூலப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்துாரை சேர்ந்த விஜயகுமார், 42, என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விஜயகுமாரிடம் விசாரித்ததில், ரேஷன் கடை, மக்களிடம், குறைந்த விலைக்கு அரிசியை வாங்கியது தெரிந்தது. அவரது கூட்டாளிகளாக, கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தகுமார், மாரிமுத்து செயல்பட்டுள்ளனர். மூவரும், அரிசியை வாகனங்களில் எடுத்துச்சென்று, நாச்சிக்குப்பத்தில் குவித்து, தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்துவிடுவர். பின் கர்நாடகா மாநிலம் தொட்டபன்னண்டஹள்ளியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிப்பதாகவும், அவர் அரிசியை மொத்தமாக கொள்முதல் செய்து, கர்நாடகாவில் உள்ள அரிசி ஆலைக்கு விற்பதாகவும், விஜயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக சிலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.