/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
23 முதல்வர் மருந்தகங்களில் ரூ.7.77 லட்சத்துக்கு விற்பனை
/
23 முதல்வர் மருந்தகங்களில் ரூ.7.77 லட்சத்துக்கு விற்பனை
23 முதல்வர் மருந்தகங்களில் ரூ.7.77 லட்சத்துக்கு விற்பனை
23 முதல்வர் மருந்தகங்களில் ரூ.7.77 லட்சத்துக்கு விற்பனை
ADDED : மே 22, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 23 முதல்வர் மருந்தகங்களில், 7.77 லட்சம் ரூபாய் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில், 12 முதல்வர் மருந்தகங்கள் மற்றும் தொழில்முனைவோர்களின், 11 முதல்வர் மருந்தகங்கள் என மொத்தம், 23 மருந்தகங்கள் செயல்பட்டு
வருகின்றன.
இதுவரை, 7.77 லட்சம் ரூபாய் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு, 2.23 லட்சம் ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கூட்டுறவு விற்பனை சங்க, மேலாண்மை இயக்குனர் பெரியசாமி, ஓசூர் துணைப்பதிவாளர் விஜயலட்சுமி, மருந்தாளுனர்கள் மற்றும் மருந்தக தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.