/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி அரசு ஐ.டி.ஐ.,யில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை
/
போச்சம்பள்ளி அரசு ஐ.டி.ஐ.,யில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை
போச்சம்பள்ளி அரசு ஐ.டி.ஐ.,யில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை
போச்சம்பள்ளி அரசு ஐ.டி.ஐ.,யில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை
ADDED : ஜன 09, 2025 08:00 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி ஐ.டி.ஐ.,யில் வரும், 31 வரை, 2ம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:போச்சம்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த டிச., 31 வரை, முதல் கட்ட மாணவர் சேர்க்கை நடந்தது. மீதமுள்ள இடங்களுக்கான, 2ம் கட்ட சேர்க்கை வரும், ஜன., 31 வரை நடக்கிறது. ஏரோநாட்டிக்கல் ஸ்டக்சர் மற்றும் எக்கியுப்மென்ட் பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீஷியன் ஆகிய, 2 ஆண்டுகால தொழிற்பிரிவுகள், இன்டஸ்டிரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீ-ஷியன் எனும் ஓராண்டு கால தொழிற்பிரிவுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பயிற்சி காலத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிய-ருக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் உதவித்தொ-கையுடன், இலவச சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்ட அரசு சலுகை-களும் கிடைக்கும். 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 40 வயதிற்குள் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்-பில்லை.மேலும், விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் என்ற முகவரியிலும், 94430 81454, 95978 12767, 97860 50759 என்ற மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கிருஷ்ணகிரி, என்ற முகவரியிலும், 97896 81995, 97879 70227 என்ற எண்களிலும் தொடர்பு கொள்-ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

