/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
/
தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தனியார் நிறுவன ஊழியர் கொலை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : நவ 03, 2025 03:08 AM
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கங்கசந்திரத்தை சேர்ந்-தவர் அமரேஷ், 35. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்., 29ம் தேதி முன்விரோதம் கார-ணமாக கொலை செய்யப்பட்டார். சூளகிரி போலீசார், சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்த செல்வம், 31, கொத்தனார் சிவா, 28, மற்றும் கிருஷ்ணாபாளையம் எலக்ட்ரீஷியன் தாமரைச்-செல்வன், 23, ஆகிய மூவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதற்கான நகல், சேலம் மத்-திய சிறையிலுள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 38 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.