/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம'் நாகமரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம'் நாகமரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
'தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம'் நாகமரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
'தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம'் நாகமரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 03, 2025 03:05 AM
ஏரியூர்: ஏரியூர் தமிழ்ச் சங்கம், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து, தமிழில் பேசுவோம், தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம், இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு என முப்பெரும் விழா நாகமரையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஊர் முக்கிய பிரமுகர் மாதையன் தலைமை வகித்தார். ஏரியூர் தமிழ்ச் சங்கம் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜ் வரவேற்றார். சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடு-நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பழனி விழிப்புணர்வு நிகழ்ச்-சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
இன்றைய நவீன காலத்தில், தமிழில் பேசுவது என்பது மாணவர்-களிடத்தில் குறைந்து வருகிறது. நம் தமிழ் மொழி வளம் பெற அனைவரும் தமிழ் மொழியில் பேச வேண்டும். தற்போதுள்ள சூழலில் வடமொழி கலந்த பெயர்கள் அதிகளவில் குழந்தைக-ளுக்கு வைக்கப்படுகிறது. குழந்தைகள், சமூக வலைதளங்களின் பயன்பாட்டை குறைத்து, திருக்குறள் மற்ற பிற அற நுால்கள் படித்து, அதன் நீதி கருத்துக்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.மாணவர்களும், ஊர்மக்களும் வீட்டுக்கு ஒரு மரத்தை வளர்த்து, நம் இயற்கை வளத்தை பாதுகாப்பது நம் கடமை என்பதை எடுத்-துரைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில், ஊர்மக்கள், மாணவ, மாணவியர் என, 100க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.

