/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வங்கத்தை சேர்ந்த 3 சிறுமியர் காப்பகத்திலிருந்து மாயம்
/
வங்கத்தை சேர்ந்த 3 சிறுமியர் காப்பகத்திலிருந்து மாயம்
வங்கத்தை சேர்ந்த 3 சிறுமியர் காப்பகத்திலிருந்து மாயம்
வங்கத்தை சேர்ந்த 3 சிறுமியர் காப்பகத்திலிருந்து மாயம்
ADDED : நவ 04, 2025 02:12 AM
தொப்பூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் அனுமதியின்றி தங்கியிருந்ததாக, வங்கதேச நாட்டை சேர்ந்த, 16 வயதுடைய, 2 சிறுமியர், 15 வயதுடைய ஒரு சிறுமி என, 3 சிறுமியரை போலீசார் மீட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகேவுள்ள காப்பகத்தில் சிறுமியர் தங்கவைக்கப் பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மூன்று சிறுமியரும் காப்பகத்திலுள்ள, 12 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து மாயமானது தெரியவந்தது. இது குறித்து, காப்பக நிர்வாகத்தினர் அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் தப்பி சென்ற, வங்கதேச நாட்டை சேர்ந்த சிறுமியர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.