/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்
/
தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்
தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்
தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்
ADDED : நவ 04, 2025 02:12 AM
கிருஷ்ணகிரி,  கிருஷ்ணகிரி நகராட்சி பகுதி தெருக்களில், கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால், இரவில், நகர பொதுமக்கள் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெரு நாய்களிடம் கடி பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் அந்தந்த மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, 500 டாக்டர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில், 500 பேருக்கு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சியும்
வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும், 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும். கைவிடப்பட்ட, நோய்வாய் பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு, 72 காப்பகங்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச திட்டங்களை செயல்படுத்த, கடந்த மே மாதம், தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், 6 மாதங்கள் கடந்தும், கிருஷ்ணகிரி நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்யவும், நாய்களை கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், நகரில் நாய்கள் கூட்டம் கூட்டமாக, போருக்கு போவது போல் சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் மிகவும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு முழுவதும் நாய்கள் கூட்டமாக குறைப்பதால், பொதுமக்கள் துாக்கத்தை இழந்துள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்யவும், வெறிபிடித்த நாய்களை, உடனே பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

