/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர் தீவிர திருத்தப்பணிக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
/
வாக்காளர் தீவிர திருத்தப்பணிக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
வாக்காளர் தீவிர திருத்தப்பணிக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
வாக்காளர் தீவிர திருத்தப்பணிக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
ADDED : நவ 04, 2025 02:14 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சியையும், பர்கூரில், சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.
இதில், கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை (4ம் தேதி) முதல் வரும், டிச.,4 வரை ஒரு மாத காலம் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின்  வீடு வீடாக சென்று பெறப்பட்ட வாக்கெடுப்பு படிவங்கள் மீது, வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகள், மறுப்புரையாக பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதில் அனைத்து வாக்காளர்களின் விபரங்கள், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சிறப்பு தீவிர திருத்த பணிக்கென மாவட்ட கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்- 1950, 94422 49270, ஊத்தங்கரை தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 04341- 220028, பர்கூர் தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 04343-266164, போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண், -04341- 252370 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 04343- 225626, சூளகிரி தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 04344- 292098, ஓசூர் தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண், -04344- 222493, தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 0434 7-235041, அஞ்செட்டி தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்,- 0434 7-236411 ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மொத்தமாக, 16,80,626 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 1896 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு திரும்பப் பெறப்படும். இப்பணியை கண்காணிக்க, 196 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.

