/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.ஏ.ஓ.,வை கொல்ல முயன்ற 3 பேர் கைது
/
வி.ஏ.ஓ.,வை கொல்ல முயன்ற 3 பேர் கைது
ADDED : நவ 09, 2024 01:21 AM
கிருஷ்ணகிரி, நவ. 9-
காவேரிப்பட்டணம் அருகே, இரும்பு கம்பியால் தாக்கி வி.ஏ.ஓ.,வை கொல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35. இவர், குருபரப்பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6 மாலை இவர் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், தன் வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். காவேரிப்பட்டணம் அடுத்த பனந்தோப்பு பெட்ரோல் பங்க் அருகில், கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் பைக்கில் வந்த மூவர், ராமச்சந்திரன் மீது லேசாக மோதி செல்ல முயன்றனர்.
இது குறித்து ராமச்சந்திரன் கேட்டபோது, ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும், ராமச்சந்திரனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினர். படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து, வேட்டியம்பட்டி உதயகுமார், 35, அவதானப்பட்டி நிர்மல், 24, விமல், 25, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.