தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2 ரவுடிகள் உட்பட 3 பேர் சிக்கினர்

2 ரவுடிகள் உட்பட 3 பேர் சிக்கினர்

2 ரவுடிகள் உட்பட 3 பேர் சிக்கினர்


UPDATED : நவ 12, 2026 02:25 AM

ADDED : நவ 12, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:25 AM ADDED : நவ 12, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார் பேகேப்பள்ளி சர்க்கிள் பகுதியிலும், டவுன் போலீசார், காளேகுண்டா மாரியம்மன் கோவில் அருகிலும், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் போலீசார், பாலதொட்டனப்பள்ளி சாலையில் உள்ள யாரப் தர்கா அருகிலும் ரோந்து சென்றனர்.

அப்போது, பொது இடத்தில் இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த குமார், 29, ஓசூர் இமாம்படாவை சேர்ந்த முபாரக், 35, தேன்கனிக்கோட்டை பிரசாந்த் தெருவை சேர்ந்த சந்தீஷ் என்ற பட்டாஸ், 32, ஆகிய, 3 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், கைதான முபாரக் மீது ஒரு கொலை உள்ளிட்ட மேலும் சில வழக்குகளும், பட்டாஸ் மீது இரு அடிதடி வழக்குகளும் உள்ளன. முபாரக், 'சி' வகை ரவுடி பட்டியலிலும், பட்டாஸ், 'பி' வகை ரவுடி பட்டியலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us