ADDED : நவ 12, 2026 01:53 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்தர் மஞ்சு, 35. இவர் நேற்று முன்தினம் மத்துார் அடுத்த சிவம்பட்டியில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு செல்வதாக கூறியவர்,
கிருஷ்ணகிரிக்கு வரவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை.
இது குறித்து அவரது அக்கா, மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில், கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டியை சேர்ந்த பெரியசாமி, 37, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார்
விசாரிக்கின்றனர்.
* ஓசூரை சேர்ந்த மாணவி பார்வதி, 13. எலத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த, 9 மாலை முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பள்ளி முதல்வர் கந்திகுப்பம் போலீசில் புகாரளித்தார். அதில், ஓசூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். போலீசார்
விசாரிக்கின்றனர்.
* சூளகிரி அடுத்த சென்னப்பள்ளி அருகே முருக்கனப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சசி பிரியா, 25. டாடா நிறுவன ஊழியர்.
இவர்களுக்கு, 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 9ம் தேதி மாலை, 4:00 மணிக்கு குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற சசிபிரியா, மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது தந்தை சண்முகம், 48, புகார்படி, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து, சசிபிரியா மற்றும் குழந்தையை தேடி
வருகின்றனர்.
