/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 35 யானைகள் விரட்டியடிப்பு
/
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 35 யானைகள் விரட்டியடிப்பு
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 35 யானைகள் விரட்டியடிப்பு
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 35 யானைகள் விரட்டியடிப்பு
ADDED : டிச 19, 2024 07:20 AM
ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டிருந்த, 35க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு நேற்று விரட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்-பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பின்புற வனப்பகுதியில் நேற்று முன்தினம், 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்-தன. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நேற்று முன்தினம் இரவில் யானைகளை தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டும் பணியில், ராயக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்-டனர். கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகர் கிராமம் அருகே, கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையை யானைகள் கடந்-ததால், அவ்வழியாக வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்-தப்பட்டது. நேற்று அதிகாலையில் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
அதேபோல், சானமாவு வனத்தில் முகாமிட்டுள்ள, 'கிரி' என்ற ஒற்றை யானை, உத்தனப்பள்ளி, போடிச்சிப்பள்ளி, பென்னிக்கல் பகுதியில் நேற்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி விட்டு, வனப்பகுதிக்கு சென்றது. இதற்கிடையே, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய, 3 யானைகள், லிங்கதீரனப்-பள்ளி பகுதியிலுள்ள ஏரியில் நேற்று ஆனந்த குளியல் போட்டு விட்டு, வனப்பகுதிக்கு சென்றன.