sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்த மினி லாரி கவிழ்ந்து 35 பேர் காயம்

/

இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்த மினி லாரி கவிழ்ந்து 35 பேர் காயம்

இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்த மினி லாரி கவிழ்ந்து 35 பேர் காயம்

இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்த மினி லாரி கவிழ்ந்து 35 பேர் காயம்


ADDED : ஆக 13, 2025 05:52 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பர்கூர்: மத்துார் அருகே, இ.பி.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மினி லாரி கவிழ்ந்தது. இதில், பயணித்த, 35க்கும் மேற்-பட்டோர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணம் மேற்-கொண்டார். பர்கூரில் நடந்த நிகழ்ச்சியை பார்க்க, போச்சம்பள்ளி அடுத்த கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் ஈச்சர் மினிலாரியில் வந்தனர். இரவு, 8:30 மணியளவில் ஜெக-தேவி அடுத்த அத்திகானுார் அருகே, காவேரிப்பட்டணம் - திருப்-பத்துார் சாலையில், எதிரே வேகமாக வந்த பிக்கப்வேன் மோதி-யதில், மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், கீழ் மயிலம்-பட்டியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு இடது கை துண்-டானது. மேலும், தங்கராஜ் என்பவர் உள்ளிட்ட, 5க்கும் மேற்பட்-டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் காயம-டைந்தனர். அனைவருக்கும், மத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us