/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி
/
கிருஷ்ணகிரியில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி
ADDED : மே 03, 2024 07:27 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 3ம் கட்ட நீச்சல் பயிற்சியில், 101 பேர் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்த கற்றுக்கொள்வதற்கான முதல் கட்ட பயிற்சியில், 16 பேரும், 2ம் கட்டமாக, 61 பேரும் பயிற்சி பெற்றனர். 3ம் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த மாதம், 27ல் துவங்கி வரும், 8 வரை நடக்கிறது. இதில், ஆண்கள், 58 பேரும், பெண்கள், 43 பேரும் என மொத்தம், 101 பேர் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். 4ம் கட்ட நீச்சல் பயிற்சி வரும் மே, 10 முதல், 21 வரையும், 5ம் கட்டமாக, 23 முதல் ஜூன் 3 வரையும் நடக்க உள்ளன.
முறையான பயிற்சியாளர்களை கொண்டு நீச்சல் பயிற்சி அளிப்பதால், ஆறு, குளம், நீர் நிலைகள் மற்றும் கிணறு போன்ற பகுதிகளில், பெற்றோர் சுயமாக தங்கள் குழந்தைகளுக்கு, நீச்சல் கற்றுக் கொடுக்காமல், மாவட்ட விளையாட்டு அரங்கில், பாதுகாப்பாக குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க, பெற்றோர்கள் முன்வர வேண்டும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில், 4ம் கட்ட நீச்சல் பயிற்சி பெற விருப்புவோர், பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி.,யுடன், 1,770 ரூபாயை எஸ்.டி.ஏ.டி., ஆன்லைன் மூலம், https://scms.sdat.broadline.co.in/#/membership----bokking/register முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74017 03487 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.