sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பர்கூர் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி; ௩௪ எருமைகள் சாவு டிரைவர் துாங்கியதால் எதிர் திசையில் சென்று மோதிய லாரி

/

பர்கூர் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி; ௩௪ எருமைகள் சாவு டிரைவர் துாங்கியதால் எதிர் திசையில் சென்று மோதிய லாரி

பர்கூர் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி; ௩௪ எருமைகள் சாவு டிரைவர் துாங்கியதால் எதிர் திசையில் சென்று மோதிய லாரி

பர்கூர் அருகே கோர விபத்தில் 4 பேர் பலி; ௩௪ எருமைகள் சாவு டிரைவர் துாங்கியதால் எதிர் திசையில் சென்று மோதிய லாரி


ADDED : ஜன 27, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அதிகாலையில் நடந்த கோர விபத்தில், டிரை-வர்கள் உள்பட நான்கு பேர், 34 எருமைகள் பலியாகின. ஒரு லாரி டிரைவர் துாங்கியதால் சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, எதிர் திசையில் வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்து நேரிட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்-கெட்டுக்கு, வெங்காயம் ஏற்றிய ஈச்சர் லாரி, நேற்று முன்தினம் புறப்பட்டது. சோலாப்பூர் மாவட்டம் பந்தாபூரை அடுத்த கதி-ரியை சேர்ந்த நாராயணன், 45, ஓட்டினார்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ண-கிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் பகுதியில் நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு லாரி வந்தது. அப்போது டிரைவர் நாராயணன் துாங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு எதிர்புறம் சென்ற லாரி, எதிரே வந்த லாரியுடன் நேருக்குநேராக மோதியது. எதிரே வந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த அருள்ஜோதி, 54, ஓட்டி வந்தார். லாரியில், 40 எருமைகளுடன், ஆந்திராவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்தார். விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்கள், எருமை ஏற்றி வந்த லாரியில் வந்த, ஒட்டன்சத்திரம் மணிகண்டன், 35, சம்பவ இடத்தில் பலியா-கினர்.எருமைகளுடன் வந்த லாரியில், ஆந்திரா மாநிலம் நந்திபாளை-யத்தை சேர்ந்த ராஜேஷ், 31, காதர்பாஷா, 56, விஜய் பாபு, 3௪; வெங்காய லாரியில் வந்த சோலாப்பூரை சேர்ந்த கரீம் ஷபீர் பகவான், ௩௮, பலத்த காயமடைந்தனர். நால்வரும் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியில் கரீம் ஷபீர் பகவான் இறந்தார். விபத்தில் இரு லாரிகளின் முன்பகு-தியும் உருக்குலைந்ததுடன், 34 எருமைகளும் பலியாகி விட்டன. ஆறு எருமைகள் காயத்துடன் உயிர் தப்பின. விபத்தால், 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us