/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 இளம்பெண்கள் உட்பட 4 பேர் மாயம்
/
2 இளம்பெண்கள் உட்பட 4 பேர் மாயம்
ADDED : ஆக 21, 2025 01:46 AM
ஓசூர்,தேன்கனிக்கோட்டை அடுத்த கொத்தனுார் அருகே, கோட்டன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுனில், 27. ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 13ம் தேதி, ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் உள்ள தன் சகோதரியின் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது அண்ணன் அணில்குமார், 32, புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.
சூளகிரி அருகே மல்லசந்திரத்தை சேர்ந்தவர் சுபாஷ், 25. கூலித்தொழிலாளி. கடந்த, 12ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் கொடியம்மா, 42, புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலன் மகள் ஸ்ரீஷ்மா, 26. ஓசூர் பாரதிதாசன் நகரில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தம்பி விஷ்ணு, 25, புகாரில், கேரள மாநிலத்தை சேர்ந்த சரத்கிருஷ்ணா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் மனைவி பிரியங்கா, 24. நேற்று முன்தினம் அதிகாலை, தன் தாய் வீட்டிற்கு செல்ல, கணவருடன் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு கழிவறைக்கு சென்ற பிரியங்கா, திரும்பி வரவில்லை. கணவர் வெற்றிவேல் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.