/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பைனான்ஸ் ஊழியர் வெட்டி கொலை சிறுவன் உட்பட 4 பேர் கைது
/
வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பைனான்ஸ் ஊழியர் வெட்டி கொலை சிறுவன் உட்பட 4 பேர் கைது
வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பைனான்ஸ் ஊழியர் வெட்டி கொலை சிறுவன் உட்பட 4 பேர் கைது
வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பைனான்ஸ் ஊழியர் வெட்டி கொலை சிறுவன் உட்பட 4 பேர் கைது
ADDED : ஆக 27, 2025 03:03 AM

ஓசூர்:ஓசூரில் பைனான்ஸ் நிறுவன ஊழியரை கொலை செய்த, 15 வயது சிறுவன் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 32; பெங்களூரு தனியார் பைனான்ஸ் நிறு வன ஊழியர். தவணை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
வெங்கட்ராஜ் வசிக்கும் தெரு வழியாக, தொரப்பள்ளியை சேர்ந்த சிக்கன் கடையில் பணியாற்றும், 15 வயது சிறுவன், அவரது நண்பருடன் பைக்கில் நேற்று முன்தினம் இரவு வேகமாக சென்றார். குழந்தைகள் இருப்பதால், மெதுவாக செல்லுமாறு வெங்கட்ராஜ் எச்சரித்துள்ளார்.
ஆனால், மீண்டும் பைக்கில் வேகமாக சென்றதால் சிறுவனை, வெங்கட்ராஜ் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த சிறுவன், 'தைரியமிருந்தால் தொரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வா' என கூறினார்.
சிறுவன் சவால் விட்டதால், இரவு, 11:00 மணிக்கு வெங்கட்ராஜ் தனியாக சென்றுள்ளார். அங்கு, காத்திருந்த சிறுவன், தொரப்பள்ளியை சேர்ந்த பைக் மெக்கானிக் அஸ்லம், 19, நவீன்ரெட்டி, 29, உட்பட, சிலர் வெங்கட்ராஜை சுற்றி வளைத்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றனர்.
வெங்கட்ராஜ் மனைவி பிரியங்கா புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவர்கள் என நான்கு பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஓசூர் அரசு மருத்துவமனையில் வெங்கட்ராஜ் சடலத்தை உறவினர்கள் நேற்று வாங்க மறுத்து, 75க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
பேச்சு நடத்திய போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து, உறவினர்கள் சடலத்தை வாங்கினர்.

