/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
450 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 18, 2025 02:18 AM
ஓசூர்:ஓசூர் வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், பாகலுாரில் மாற்றுக்கட்-சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி தலைமை வகித்தார். அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்-பட்டோர், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்-டனர்.
அதேபோல், தெற்கு
ஒன்றிய, தி.மு.க., சார்பில், ஓசூர் சென்னீஸ் மகாலில் மாற்று கட்-சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னி-லையில், 100க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், குருபசப்படி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், 50க்கும் மேற்-பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், பகுதி செயலாளர் ஆனந்தய்யா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன், ஒன்றிய செயலாளர் நாகேஷ், நகர அவைத்-தலைவர்
செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.