/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி உட்பட 5 பேர் மாய ம்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி உட்பட 5 பேர் மாய ம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி உட்பட 5 பேர் மாய ம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி உட்பட 5 பேர் மாய ம்
ADDED : ஆக 08, 2025 01:36 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்லுாரி மாணவி உட்பட, 5 பேர் மாயமாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 4ம் தேதி காலை, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்த மதன்குமார் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர் அருகே, பெத்த எலசகிரியை சேர்ந்தவர் கமலேஷ் மனைவி நந்தினி, 26. இவருக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறில் கணவர் தாக்கியதால், மகனுடன் கடந்த, 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் திரும்பி வராததால், அவரது தாய் லட்சுமி, 45, நல்லுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.
சூளகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சக்காரலப்பா மகள் முனிலட்சுமி, 23. கடந்த, 4ம் தேதி காலை, டாடா நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு வீட்டிலிருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது தாய் ருக்மணி, 39 புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பர்கூர் அருகே பட்லப்பள்ளியை சேர்ந்தவர் அருள்பிரசாத், 25. கூலித்தொழிலாளி. கடந்த, 1ம் தேதி இரவு, வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் உமா, 45, பர்கூர் போலீசில் கொடுத்த புகார் படி, போலீசார் தேடி வருகின்றனர்.