/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 8 பேர் மாயம்
/
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 8 பேர் மாயம்
ADDED : ஜூலை 19, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி. கடந்த, 14ல், மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த பாறைகொட்டாயை சேர்ந்த லீலா வினோதன், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
* ஓசூர் அருகே, 14 வயது சிறுமி நேற்று முன்தினம் முதல் காணவில்லை. சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மணி, 27, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
* ஓசூரை சேர்ந்தவர், 12 வயது சிறுமி. கடந்த, 14 முதல் காணவில்லை. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பெங்களூரு ஆனேக்கல்லை சேர்ந்த சஞ்சய், 21, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓசூர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர் அடுத்த மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ரம்யா, 25, தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் 7 வயது மகன் நிஷாந்துடன் கடந்த, 15ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து பெண்ணின் சகோதரர் பாகலுார் போலீசில் புகார் அளித்தார். அதில், தாசரப்பள்ளியைச் சேர்ந்த சாகர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
* பர்கூர் அடுத்த துாளிகொட்டாயை சேர்ந்தவர் பேபி ஷாலினி, 19, தனியார் நிறுவன ஊழியர். கடந்த 16ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். பெண்ணின் பெற்றோர் கந்திகுப்பம் போலீசில் அளித்த புகாரில், கிருஷ்ணகிரி லயன்கொள்ளையை சேர்ந்த சேது என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
* தேன்கனிக்கோட்டை, அண்ணாநகரை சேர்ந்தவர் பூமிகா, 23. கடந்த, 16ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் படி தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல ஊத்தங்கரை அடுத்த வளத்தனுாரை சேர்ந்தவர் சரசு, 38, என்பவர் கடந்த 15ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.