/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறைத்துறை டி.ஐ.ஜி., மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு
/
சிறைத்துறை டி.ஐ.ஜி., மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு
சிறைத்துறை டி.ஐ.ஜி., மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு
சிறைத்துறை டி.ஐ.ஜி., மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு
ADDED : செப் 10, 2024 07:42 AM
வேலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சிவக்-குமார், 30; ஆயுள் தண்டனை கைதியாக வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு, சிறைக்காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது வீட்டிலிருந்த, 4.50 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை திருடியதாக, சிறை வார்டன்கள் கடுமையாக தாக்கியதில் சிவக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்-டது. அவரின் தாயார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக வேலுார் நீதிபதி விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிவக்குமாரிடம் விசா-ரணை நடந்த நிலையில், சேலம் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்-பட்டார். அதேசமயம் சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி உள்-ளிட்ட, 14 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த, 7ம் தேதி வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரங்களால், சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைக-ளுக்கு, சிறை கைதிகளை பயன்படுத்த தடை விதித்து, உயரதிகா-ரிகள் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.