/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செய்வினைக்கு பரிகாரம் செய்வதாக ரூ.8 லட்சம் பறித்த தம்பதி கைது
/
செய்வினைக்கு பரிகாரம் செய்வதாக ரூ.8 லட்சம் பறித்த தம்பதி கைது
செய்வினைக்கு பரிகாரம் செய்வதாக ரூ.8 லட்சம் பறித்த தம்பதி கைது
செய்வினைக்கு பரிகாரம் செய்வதாக ரூ.8 லட்சம் பறித்த தம்பதி கைது
ADDED : அக் 10, 2024 01:57 AM
செய்வினைக்கு பரிகாரம் செய்வதாக
ரூ.8 லட்சம் பறித்த தம்பதி கைது
தர்மபுரி, அக். 10-
தர்மபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை சேர்ந்த சுபா, 32, பெங்களூருவில் வசிக்கிறார். இவர் தன் மொபைலில் வந்த ஜோதிடம் குறித்த விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த எண்ணில் தொடர்பு கொண்டார். எதிர் முனையில் பேசிய சொர்ணகுமார் என்பவரிடம், தன் கணவர் பக்கவாதத்தில் பாதித்துள்ளதால், ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்ய கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சொர்ணகுமார், சுபாவின் கணவருக்கு செய்வினை வைத்துள்ளதால், அதை நீக்க வேண்டும். அதற்கான பரிகார பூஜை செய்யும்போது, உடனிருப்பவருக்கும் பக்கவாதம் வரும் என கூறி, ஆன்லைன் மூலம், 8 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். ஆனால், பரிகாரம் எதுவும் செய்யாததால் ஏமாற்றமடைந்த சுபா, தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின்படி, தனிப்படை போலீசார், சென்னையில், 'அக்சய விநாயகர் ஜோதிட ஆராய்ச்சி நிலையம்' என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்த சொர்ணகுமார், 48, அவர் மனைவி வெங்கடேஸ்வரி, 38 ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். பின் இருவரையும், தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சொர்ணகுமாரை, தர்மபுரி மாவட்ட சிறையிலும், வெங்கடேஸ்வரியை சேலம் சிறையிலும் அடைத்தனர்.

