/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை பொருள் வழங்கிய இஸ்லாமியர்

ADDED : பிப் 18, 2024 10:54 AM
ஓசூர்: ஓசூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, இஸ்லாமியர்கள் அம்மனுக்கு சீர்வரிசை பொருள் வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா பாகலுாரில், 400 ஆண்டு பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்ததால் புனரமைக்கும் பணிக்கு பின், 7 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடந்தது.
இதுவும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா நிகழ்வு நேற்று துவங்கியது. இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், பாகலுார் பகுதி இஸ்லாமியர்கள், கோட்டை மாரியம்மனுக்கு தாய் வீட்டு சீதனமாக பட்டுப்புடவை, இனிப்பு, பூ மாலை, ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை உட்பட பல்வேறு பொருட்களை, நேற்று ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் நிர்வாகிகளிடம் சீர் வரிசையாக வழங்கினர்.
இதை தொடர்ந்து கோவிலுக்குள் அவர்களை அழைத்து சென்று, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். இதில் பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் உமா, முனிரத்தினா, பாபு உட்பட பலர் பங்கேற்றனர். நாளை காலை, 9:30 மணிக்கு கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.