/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆப்பரேட்டரை கொல்ல முயற்சி நண்பர்கள் இருவருக்கு வலை
/
ஆப்பரேட்டரை கொல்ல முயற்சி நண்பர்கள் இருவருக்கு வலை
ஆப்பரேட்டரை கொல்ல முயற்சி நண்பர்கள் இருவருக்கு வலை
ஆப்பரேட்டரை கொல்ல முயற்சி நண்பர்கள் இருவருக்கு வலை
ADDED : அக் 24, 2024 01:08 AM
ஆப்பரேட்டரை கொல்ல முயற்சி
நண்பர்கள் இருவருக்கு வலை
ஓசூர், அக். 24-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் குப்புசாமி, 26. கம்ப்ரசர் ஆப்பரேட்டர். ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த பழ வியாபாரி சேகர், 28, பார்வதி நகர் கூலித்தொழிலாளி இம்ரான்கான், 27, ஆகிய மூவரும் நண்பர்கள்; ஓசூர் தேர்ப்பேட்டை ஏரி அருகே, 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், சேகர், இம்ரான்கான் சேர்ந்து குப்புசாமியை தாக்கவே, அவரும் பதிலுக்கு அவர்களை தாக்கியுள்ளார். அப்போது அவருக்கு, சேகர் மற்றும் இம்ரான்கான் கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதிர்ச்சியடைந்த குப்புசாமி, தன் அண்ணன் கோபியிடம் நடந்த விபரத்தை கூறி விட்டு, பிரசவத்திற்கு தாய் வீடு சென்றுள்ள மனைவியை பார்க்க, பெரம்பலுார் செல்வதாக கூறி, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நடந்து சென்றார்.
காளேகுண்டா அருகே, சேகர் மற்றும் இம்ரான்கான் ஆகியோர், குப்புசாமியை வயிறு உட்பட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். படுகாயமடைந்த குப்புசாமி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அண்ணன் கோபி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, சேகர், இம்ரான்கானை தேடி வருகின்றனர்.