/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் கம்பத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
மின் கம்பத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : மே 11, 2024 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 33.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் மின்வாரியத்தில், கேங்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த, 8 மாலை, 6:00 மணிக்கு சித்தனப்பள்ளியில் உள்ள நாகராஜ்ரெட்டி என்பவரது நிலத்தில், மின்சார லைனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் அதிகாலை உயிரிழந்தார்.நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.