sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விபத்தில்லா தமிழகம் பயிற்சி பட்டறை டிரைவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி

/

விபத்தில்லா தமிழகம் பயிற்சி பட்டறை டிரைவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி

விபத்தில்லா தமிழகம் பயிற்சி பட்டறை டிரைவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி

விபத்தில்லா தமிழகம் பயிற்சி பட்டறை டிரைவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : நவ 08, 2025 03:50 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழகம் முழுவதும் அதிக விபத்துகள் நடக்கும், 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதற்கட்டமாக, 50 இடங்-களில் விபத்து முதலுதவி பயிற்சி மற்றும் விபத்தில்லா தமிழகம் என்ற அரசின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், பயிற்சி பட்டறைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்-சாலை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்-ளது. இதனால் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை, ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வ-கிக்கும் நிறுவனம் ஆகியவை சார்பில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கிருஷ்ண-கிரி, தர்மபுரி மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ரஞ்சித் வரவேற்றார். ஜெம்ஸ் செல்வகுமார், பாக்கியலட்சுமி பேசினர். வாகன டிரைவர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு, அவசர மருத்துவ உதவி பயிற்சி-யாளர் சந்திரசேகர், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்க-ளுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என பயிற்சியளித்தார். 108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர், சிவா உட்பட பலர் பங்கேற்-றனர். அனைவருக்கும் முதலுதவி கையேடு மற்றும் முதலுதவி பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us