/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயி மீது தாக்குதல் நான்கு பேருக்கு காப்பு
/
விவசாயி மீது தாக்குதல் நான்கு பேருக்கு காப்பு
ADDED : நவ 08, 2025 03:49 AM
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன், 65, ராமன், 35, லட்சுமணன், 33. இவர்கள் மாரசந்திரம் கிராமத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் நரணிகுப்-பத்தை சேர்ந்த ஹரீஷ்குமார், 27, காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த, 6 காலை, நிறுவன கழிவுகளை மார்கண்-டேயன் ஆற்றில் அவர்கள் கொட்டியுள்ளனர். இது குறித்து குப்-பச்சிபாறையை சேர்ந்த வெங்கடேசன், 57, என்பவர்
கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுப்பிரமணியன் உள்பட 4 பேரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகிரி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை-யடுத்து, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி சுப்பிரம-ணியன், ராமன், லட்சுமணன், ஹரீஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அதே போல், சுப்பிரமணியன் தான் தாக்கப்பட்-டதாக புகார் அளித்தார். அதன்படி, வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

