/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியற்ற செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
/
அனுமதியற்ற செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
அனுமதியற்ற செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
அனுமதியற்ற செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை; ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
ADDED : மே 01, 2024 01:51 PM
அரூர்: அரூர் வருவாய் கோட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், இயங்கி வரும் பெரும்பாலான செங்கல் சூளைகள் கனிமவளத்துறையின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது. அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்துவது சட்ட விரோதம். எனவே, சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், தர்மபுரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, அதற்குரிய உரிமத்தை, மிக எளிதான வழியில் பெற்றுக் கொள்ளலாம். உரிமம் பெறாமல் செங்கல் சூளைகள் இயக்கப்படுவதுடன், அதற்கு அனுமதியின்றி பட்டா நிலங்கள், பொது இடங்கள், ஏரி மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து மண் எடுக்கப்படுமானால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், போலீஸ் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரர்கள், கலெக்டரின் முன் அனுமதியின்றி மண் மற்றும் மணல் அள்ளுவது தெரிய வந்தால் அவர்கள் மீதும், உரிய சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இது தொடர்பாக தகவல் ஏதும் தெரிவிக்க விரும்பினால், அரூர் தாசில்தார், 94450 00534, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார், 94450 00535 மற்றும் அரூர் ஆர்.டி.ஓ., - 94454 61802 ஆகியோரை மேற்கண்ட மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது 'வாட்ஸாப்' மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.