/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனநலம் பாதித்தோர் மீட்பு மையத்தில் குணமான 2 பேர் குடும்பத்தாரிடம் சேர்ப்பு

ADDED : நவ 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி,: மனநலம் பாதித்தோருக்கான மீட்பு மையத்தில் இருந்து, குணம-டைந்த, 2 பேர் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்-கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி நகரிலுள்ள அரசு மருத்துவமனையில், மனநலம் பாதித்தோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தை, கடந்த ஜூலை, 3ல், மாவட்ட கலெக்டர் சரயு திறந்து வைத்தார்.
இங்கு ஆதரவற்ற, மனநலம் பாதித்து தெருவோரங்களில் சுற்றித்-திரிந்த, 49 வயது பெண், 42 வயது ஆண் ஆகிய இருவரை சமூக பணியாளர்கள், கடந்த ஜூலை மாதம் மீட்டனர். அவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரி மனநல மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மைய சமூக பணியாளர்கள் தொடர்ந்து, மனநல ஆலோசனை வழங்கி வந்-தனர்.
அதன்படி, அவர்களின் இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்-களின் விலாசம் கண்டறியப்பட்டது. 3 மாத கால சிகிச்சைக்கு பின் குணமான இருவரும், அவர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் சரயு முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகர், உள்ளி-ருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் மது, உதவி உள்ளிருப்பு மருத்-துவ வல்லுனர் டாக்டர் கிருபாவதி, மனநல மருத்துவர் டாக்டர் முனிவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜலாலுாதீன் மற்றும் சமூக பணியாளர்கள் காயத்ரி, சுகேல் ஆகியோர் உடனிருந்தனர்.