/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
/
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 26, 2024 06:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத்தலைவர் அமீர்ஜான் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் கன்னியப்பன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசினார். அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் ஆஜி நன்றி கூறினார்.
கூட்டத்தில், 2026ல் இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க அயராது உழைக்க வேண்டும். போதை பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செய்தி தொடர்பாளர் சமரசம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் முனிவெங்கடப்பன், மாவட்ட இணை செயலர் மனோரஞ்சிதம் நாகராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலர் சதீஷ்குமார், நகர செயலர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.