/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணத்தில் டிராக்டர் ஓட்டி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
/
காவேரிப்பட்டணத்தில் டிராக்டர் ஓட்டி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
காவேரிப்பட்டணத்தில் டிராக்டர் ஓட்டி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
காவேரிப்பட்டணத்தில் டிராக்டர் ஓட்டி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 10, 2024 06:59 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., காவேரிப்பட்டணம் முத்தலாம்மன் கோவிலில் பிரசாரத்தை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், கருக்கன்சாவடி, சவுளூர், பன்னிஹள்ளி, தேவர் முக்குலம், சப்பானிப்பட்டி, பையூர் உள்ளிட்ட, 46 கிராமங்களில் பிரசாரம் செய்து பேசுகையில், ''டாடா, ஓலா, டெல்டா என பல கம்பெனிகளை கிருஷ்ணகிரிக்கு கொண்டு வந்தது, அ.தி.மு.க., அரசு. மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி, தற்போது, தி.மு.க., அரசை கேள்வி கேட்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க., எனவே, வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தேசிய கட்சிகளை நம்பாமல், நம் பிரச்னைக்கு தீர்வு காண, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்யங்கள்,'' என்றார்.
பன்னிஹள்ளி கூட்ரோட்டில் பிரசாரத்தின் மோது, அப்பகுதியிலுள்ள மாந்தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியவாறு, அங்கு பணியாற்றிய மற்றும் அப்பகுதியினரிடம் ஓட்டு கேட்டார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி, காவேரிபட்டணம் பேரூர் செயலாளர் விமல் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சீனிவாசன் உடனிருந்தனர்.

