/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா
ADDED : நவ 28, 2025 01:35 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மத்துார் அடுத்த, தருமதோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரின் மகள் அர்ச்சனாவுக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும், நேற்று மத்துார் தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில் திருமணம் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தர்மபுரி முன்னாள், அ.தி.மு.க., அமைச்சர் அன்பழகன், பாலகிருஷ்ணாரெட்டி, திருப்பத்துார் மாவட்ட செயலாளர் வீரமணி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், கந்திலி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருப்பதி, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, நரேஷ்குமார் மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் பழனியம்மாள் மனோகரன் உள்ளிட்ட, அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

